RCB: 'விக்கெட்டுகள் விழுந்தபோது பதற்றமாக இருக்கிறேனா ன்னு வெங்கடேஷ் ஐயர் கேட்டார், ஆனா.!'- படிக்கல்

Spread the love

19-வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில், தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் குறிவைத்து குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அஹமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி, துல்லியமான பந்துவீச்சின் மூலம் குஜராத் அணியை முதல் இன்னிங்ஸிலேயே கட்டுப்படுத்தியது.

Rcb
Rcb

20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் அணியின் இலக்கை, பெங்களூரு அணி சிரமமின்றி விரட்டியதன் மூலம் தனது இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வென்று, மீண்டும் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்நிலையில் அணியின் வெற்றி குறித்து பேசிய படிக்கல்,”இது நம்ப முடியாத ஒரு பயணமாக இருந்தது. சிறந்த வீரர்களுடன் இருக்கும் போது, நீங்களும் மேலும் முன்னேறுவீர்கள். எங்கள் பந்துவீச்சாளர்கள் இந்த சீசன் முழுவதும் அற்புதமாக செயல்பட்டனர்.

விக்கெட்டுகள் விழுந்தபோது நான் பதற்றமாக இருக்கிறேனா என்று வெங்கடேஷ் ஐயர் கேட்டார்.

படிக்கல்
படிக்கல்

ஆனால் விராட் கோலி மறுமுனையில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது பதற்றப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர் இந்த சீசனில் அபாரமாக விளையாடினார்.

கோப்பையை வெல்வது என்பது நாங்கள் நீண்ட காலமாக ஏங்கிய ஒன்று. இறுதியாக அந்த கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், எந்த காயமும் இல்லாமல் இந்த சீசனை நிறைவு செய்ததும் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *