“தமிழ் மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்” – அமைச்சர் மரியவில்சனை சாடும் பாஜக | The BJP has condemned Maria Wilson for criticizing the Tamil language inappropriately.

Spread the love

நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் மரிவில்சன், “‘நான் பிறப்பால் கிருஸ்தவன். என் மதம் எனக்கு அன்பு, கருணை, இரக்கத்தின் மொழியைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இது தமிழ் படித்தவர்களுக்குக் கூட தெரியாது. நான் பைபிளில் படித்துள்ளேன்” என உரையாற்றினார்.

அமைச்சர் மரிய வில்சனின் இந்தப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா அமைச்சர் மரியவில்சன் அவர்களே?

நிதியமைச்சர் மரியவில்சன்

நிதியமைச்சர் மரியவில்சன்

சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத்தான் தெரிகிறது.

“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழிதான் நம் தாய் மொழி தமிழ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *