“தயாராக இருங்கள், தவெக ஆட்சியின் கீழ் தமிழ்நாடு அழிவைச் சந்திக்கும்.!”- ஸ்டாலின் விமர்சனம் |stalin slams tvk government for gst and investement

Spread the love

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தவெக அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் பட்டியலின் விளக்கப்படத்தைக் குறிப்பிட்டும், கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் 1,614 கோடி ரூபாய் முதலீடு செய்தது குறித்தும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார்.

அப்பதிவில், “GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *