“லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நட்சத்திரமாகவே வளர்ந்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.
தற்போது அவர் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்குப் ‘பி. ஆர். ஷோ’ எனப் பெயரிட்டிருக்கிறார்.
அவருடைய தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிவிப்பும் தற்போது வெளியாகியிருக்கிறது.
ஒருவர் இல்லாமல் மொத்தமாக 6 பேர் இணைந்து ‘தி ஆல்ஃபா யூனிட்’ என்கிற பெயரில் இப்படத்தை இயக்குகிறார்கள். பிரதீப் ரங்கநாதனின் கதையை இவர்கள் இணைந்து இயக்குகிறார்கள்.