திறமையான தடகள வீரராக இருந்தாலும் அவருக்கு எழும் தடைகள், விளையாட்டுத் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஊழல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, இக்கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் தென்பாதியான்.

ஆதிரனின் பொருளாதார நிலை மற்றும் சமூகச் சூழல் அவருக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதிகாரப் பலம் கொண்டு ஆதிரனின் திறமையை முடக்க முற்படுபவர்கள் என இதனைச் சுற்றிப் படத்தின் முதல் அரை மணி நேரம் கதை நகர்கிறது.
தூய்மைப் பணியாளர்களுக்கு அருவருப்பினால் ஏற்படும் உளவியல் ரீதியிலான பாதிப்பை காட்சிகள் மூலம் உணர்த்திய விதம் பாராட்டுக்குரியது!
இப்படியான நல்ல முன்னெடுப்புகள் இருந்தாலும், அது திரைக்கதையாக விரிக்கப்பட்ட விதமும், காட்சிகளாகத் திரையில் அரங்கேற்றப்பட்ட விதமும் இந்த ‘அங்கீகார’த்திற்குத் தடங்களாக மாறியிருக்கின்றன. சில நடிகர்களின் செயற்கையான நடிப்பும், நாடகத்தன்மையான காட்சிகளும் படத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.