காவல்துறையில் `என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்” எனப் பெயரெடுத்திருந்த, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வெள்ளதுரை, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ இ அதிமுகவில் இணைந்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் சசிகலா பொதுச் செயலாளராக இருந்த அ.இ.பு.த.ம.மு.க சார்பாக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தற்போது அதிமுகவில் சேர்ந்திருக்கும் அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.

”அடிப்படையில் நான் எம்.ஜி.ஆர் ரசிகன். அவருடைய படங்கள். அவர் நடித்த படத்தின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிச்சு அவர் மேல ஒரு பற்றுதல் என் கல்லூரி காலத்துலயே உருவாகிடுச்சு. அதனால அப்பவே கட்சி உறுப்பினர் கார்டு வாங்கி வச்சிருந்தேன்.
பிறகு அரசுப் பணியில சேர்ந்துட்டதால அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அம்மா அந்த இயக்கத்தைக் கட்டுக்கோப்பாகவும், தமிழக மக்களுக்கு பிடிக்கிற விதத்துலயும் கொண்டு போனாங்க. அம்மா ஆட்சிக் காலத்துல அவங்க கையால நிறைய தடவை விருதுகளை வாங்கியிருக்கேன். ஆனா எந்த இடத்துலயும் நான் கட்சி ஆளா இருந்ததில்லை.
சட்டம் ஒழுங்குக்கு அவங்க கொடுக்கிற முன்னுரிமையும் முக்கியத்துவமும் ஒரு போலீஸ் அதிகாரியா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
பிறகு அவங்க தவறிய பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த காலத்துலயும் சட்டம் ஒழுங்கு சீராகவே இருந்திச்சு.