தருமபுரி : நகைக்காக மாமியாரை கொலை செய்து குவாரி குட்டையில் வீசிய திமுக நிர்வாகி! | DMK leader arrested against murder case

Spread the love

சந்தேகமடைந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, மாமியார் சசிகலாவிடம் ஏற்கனவே 5 பவுன் நகையை வாங்கி திருப்பிக் கொடுக்காததால் தகராறு ஏற்பட்டதாகவும், மேலும் அவரிடம் இருக்கும் மற்ற நகைகளையும் அபகரிக்கவும் திட்டமிட்டு காரில் கடத்திச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும், அவர் உடலை நண்பரின் ஆம்புலன்ஸில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்குக் கொண்டு சென்று அங்குள்ள குவாரி குட்டையில் கல்லைக்கட்டி வீசிவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீசார் வாணியம்பாடி சென்று குவாரி குட்டையில் மிதந்த சசிகலாவின் உடலை மீட்டனர்.

நகைக்காக மட்டும் இக்கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்று அஸ்லாமிடமும் உதவி செய்த அவரின் நண்பர்களான ஆம்புலனஸ் டிரைவர் பூபால், நவீன் ஆகியோரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *