அதனடிப்படையில், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (Central Empowered Committee – CEC) ஒன்று அமைக்கப்பட்டது. அது 2025 மார்ச் முதல் 2026 சனவரி வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.
இந்தக் குழு அளித்த இரண்டு அறிக்கைகளின் அடிப்படையில், 29.05.26 அன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு இறுதித் தீர்ப்பை அளித்தது. கண்டமனூர், மேகமலை, வருசநாடு, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஶ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள 5072.653 ஹெக்டேர் நிலப்பரப்பை 4601 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ள தகவல் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலங்காலமாக இப்பகுதிகளில் வசித்து வரும் மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி அவர்களை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்றும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய துணை ராணுவப்படையை மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு பயன்படுத்தலாம் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், உச்சநீதிமன்ற ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கையை மத்திய குழு சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.