தருமபுரி : வீடுகளுக்குள் படையெடுத்து வரும் எறும்புகள்! – நிம்மதி இழந்து தவிக்கும் மக்கள்/Red ant force attack to village people

Spread the love

சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியிலுள்ள பாக்கு மரங்களில் மொய்க்க ஆரம்பித்த சிவப்பு எறும்புகள், நாளடைவில் அதிகரித்து அருகிலுள்ள முள்ளிக்காடு குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கின. தெருக்களில் பெருகிய லட்சக்கணக்கான எறும்புகள், பின்பு ஒவ்வொரு வீட்டுக்குள் புகுந்து அனைத்துப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது.

சிவப்பு எறும்புகள்

சிவப்பு எறும்புகள்

சாதாரண எறும்புகள் போலில்லாமல் சாரை சாரையாக வந்த சிவப்பு எறும்புகளால் மக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். வீட்டுக்குள் அமர முடியாமலும், இரவில் உறங்க முடியாமலும் எறும்புக்கடியால் கிராம மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து ஊராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க, ஊருக்குள் வந்து பார்வையிட்டவர்கள், பின்பு வேளாண்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சியாளர்களை அழைத்து வந்து ஆய்வு செய்ததில் அப்பகுதியிலுள்ள பாக்கு மரங்களைத் தேடி வரும் எறும்புகள்தான் கிராமத்துக்குள்ளும் பெருகி வருவதாக தெரிவித்தனர். ஆனால், இதை அழிப்பதற்கு எந்த மாற்று வழியும் உருவாக்காமல் தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டே இருப்பதாக கிராம மக்கள் புகார் எழுப்புகிறார்கள்.

“குடிநீர், உணவு என அனைத்திலும் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருப்பதால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை, ஓய்வெடுக்க முடியவில்லை, எறும்பு கடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருகின்ற நிலைமை ஏறட்டுள்ளது. இதை விரட்ட எறும்புப் பொடிகளையும், மருந்து சாக்பீஸ்களையும் பயன்படுத்தியும் எந்தப் பலனும் இல்லை, அதையும் மீறி எறும்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது” என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கும் கிராம மக்கள், “இதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் ஊரை காலி செய்துவிட்டு போவதைத் தவிர வேறு வழியில்லை” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனைக்கு விரைந்து ஒரு தீர்வை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *