தலசீமியா சிகிச்சைக்கானத் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை!| Apollo Cancer Foundation Reinforces Commitment to Thalassemia Care

Spread the love

“இந்த நோயை முன்னிறுத்தி, Dr. Preetha Reddy கூறுகையில், ‘தலசீமியா இந்தியாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அமைதியாக பாதித்து வருகிறது. இருப்பினும், இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது. ஆரம்பத்திலேயே பரிசோதனை, சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை கிடைத்தால், பல குழந்தைகளின் வாழ்க்கையை மாற்ற முடியும்.

அப்போலோவில், மருத்துவ சேவை என்பது மருத்துவமனைகளின் எல்லையைத் தாண்டிய ஒரு சமூகப் பொறுப்பு என நாங்கள் நம்புகிறோம். மருத்துவ நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் இந்திய நிறுவனங்கள் ஒரே நோக்கத்துடன் இணையும் போது தான் உண்மையான மாற்றம் உருவாகிறது. உயிர்காக்கும் சிகிச்சைகளை அதிகமானோருக்கு கொண்டு சேர்க்கவும், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கும் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை உயர்த்தவும் Coal India Limited வழங்கிய ஆதரவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

வணிகத்தைத் தாண்டி சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க நிறுவனங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கு அவர்களின் உதவி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் பல நிறுவனங்கள் தலசீமியா குறித்த விழிப்புணர்வு, ஆரம்பகட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சை முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், ஒவ்வொரு குழந்தைக்கும் சிகிச்சை மட்டுமல்ல, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழும் உரிமையும் கிடைக்க வேண்டும்’ என்றார்.”

இந்த நிகழ்வில் பேசிய தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குழந்தை நலவியல் மற்றும் இரத்தவியல் புற்றுநோயியல் மூத்த ஆலோசகர் டாக்டர் ரேவதி ராஜ் அவர்கள் இவ்வாறு கூறினார், “தலசீமியா என்பது குழந்தையை மட்டுமல்ல, முழு குடும்பத்தின் உணர்ச்சியையும், நிதி ரீதியான நல்வாழ்வையும் பாதிக்கிறது. சரியான நேரத்தில் நோய் கண்டறிதல், விழிப்புணர்வு, மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான வாய்ப்புகள் மூலம், குழந்தைகள் ஆரோக்கியமான, நோய் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். இன்று, எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒவ்வொரு தலசீமியா வெற்றியாளரின் துணிச்சலையும் நாங்கள் கொண்டாடுகிறோம்.” 

தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குழந்தை இரத்தவியல் ஆலோசகர் டாக்டர் ரம்யா U, அவர்கள் மேலும் கூறியதாவது, “தலசீமியா என்பது வாழ்நாள் முழுவதுமான ஒரு மருத்துவ நிலை மட்டுமல்ல, அது குழந்தைகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு சவாலான பயணமாகும். தாமதமான நோய் கண்டறிதல், குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது ஆகியவற்றால், பல குழந்தைகள் இன்றும் வழக்கமான இரத்த மாற்றத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமான மற்றும் நோய் இல்லாத வாழ்க்கையை வாழ உதவும் வகையில் விழிப்புணர்வை வலுப்படுத்துவதிலும், சரியான நேரத்தில் தலையீடுகளை மேற்கொள்வதிலும், மேம்பட்ட சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவதிலும் இது போன்ற முன்முயற்சிகள் முக்கியமானவை.” 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *