தலா ரூ.15 கோடிக்கு விலைபோனதாக புகார்: ஷிண்டேயின் சிவசேனாவில் சேரும் 6 உத்தவ் கட்சி எம்.பி.க்கள் | Allegations of a ₹15 crore payout each: Six Uddhav-faction MPs set to join Shinde’s Shiv Sena.

Spread the love

உத்தவ் தாக்கரே கட்சியின் பர்பானி தொகுதி எம்.பி. சஞ்சய் ஜாதவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் மற்றும் அவரது தொகுதிக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல, ஹிங்கோலி தொகுதி எம்.பி. நாகேஷ் பாட்டீல் அஷ்டிகருக்கும் அவரது தொகுதிக்கு நிதி மற்றும் 2029-ல் மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு (டிக்கெட்) வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஓம்ராஜே நிம்பல்கரும் அணி மாற முடிவு செய்து டெல்லிக்குச் சென்றுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே

தாக்கரேவின் கட்சியில் எதிர்காலம் இல்லை என்று கருதுவதால், ஷிர்டி நாடாளுமன்ற உறுப்பினர் பாவ்சாகேப் வாக் சௌரே, ஷிண்டே சேனாவுடன் இணைய முடிவு செய்துள்ளதாக சேனா நிர்வாகிகள் தெரிவித்தனர். இது குறித்து சிவசேனா அமைச்சர் சிவசேனா அமைச்சர் பிரதாப் சர்னாயக் கூறுகையில், “எங்கள் டைகர் ஆப்ரேசன் எப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், தற்போது தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த எந்தவொரு எம்.பி.யும் எங்களுடன் தொடர்பில் இல்லை.

ஆனால், சிவசேனாவில் இணைய விரும்பும் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் கட்சியில் சேர நல்ல வாய்ப்பு உள்ளது,” என்று தெரிவித்தார்.

ஆனால் ஏக்நாத் ஷிண்டே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.ருபால் டுமானே இது குறித்து கூறுகையில், “ஆப்ரேசன் டைகர் திட்டத்தின் கீழ் உத்தவ் தாக்கரே அணியில் இருக்கும் 7 எம்.பி.க்களை எங்களது பக்கம் இழுப்பதற்கான பணி இறுதிக்கட்டத்தை நெறுங்கி இருக்கிறது. அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது முதலில் பரிசோதனைகள் செய்யப்பட்டு அறிக்கைகள் பெறப்படுவது போல இப்போது மருத்துவரிடம் அதற்கான இறுதித் தேதியை மட்டும் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

அந்த நாளில் அறுவை சிகிச்சை நடைபெறும். இது மழைகாலக் கூட்டத்தொடருக்கு முன்பாகவே நடக்கும். எல்லா விவரங்களையும் பகிர்ந்துகொள்வது சரியாக இருக்காது. ஆனால் அவர்கள் எங்களுடன் இணைவது ஏறக்குறைய உறுதி. இந்த விவாதங்கள் ஒரு மாதமாக நடைபெற்று வருகின்றன. இன்று அவை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன,” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *