தலைகீழாக விழுந்த ஹெலிகாப்டர்.. பெங்களூரை சேர்ந்த 5 பேர் + பைலட் பலி.. ஆலங்கட்டி மழையால் சோகம் | Uttarakhand Helicopter Crash: 5 rom Bengaluru among 6 killed in Joshimath

Spread the love

India

oi-Nantha Kumar R

டேராடூன்: உத்தரகாண்ட்டில் இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் உள்பட 6 பேர் பலியாகினர். இதில் 5 பேர் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

uttarakhand-helicopter-crash-5-rom-bengaluru-among-6-killed-in-joshimath

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் தாம் பகுதியில் இருந்து தலைநகர் டேராடூனில் உள்ள சாகஸ்திரதாரா பகுதிக்கு ‘டிரான்ஸ் பாரத் அவியேஷன்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தது. விமானத்தில் ஒரு பைலட் மற்றும் 5 பயணிகள் பயணித்தனர்.

இந்த ஹெலிகாப்டர் உத்தரகாண்ட்டின் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் என்ற பகுதியில் சாய் கிராமத்தின் மேல்புறம் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.

இதுபற்றி அறிந்தவுடன் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவ்ததினர் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மோசமான வானிலை நிலவியதால் இந்த பணி சவால் நிறைந்ததாக இருந்தது. இறுதியாக சாய் கிராமத்தின் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

இதில் பைலட் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த 5 பயணிகளும் பலியாகினர். இதில் பயணிகள் அனைவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர்கள் அருண் சலுங்கே, எச்எஸ் நாகராஜா, பிரதாப் பிசிஹள்ளி, சுதீர், சங்கர் கவுடா என்பது தெரியவந்தது. உயிரிழந்த பைலட்டின் பெயர் ஹிமான்சு சபர்வால் என்பதும் தெரியவந்தது.

மோசமான வானிலை காரணமாக இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் வானில் பறக்கும் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கீழே வரும் வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *