காயம்பட்டிருக்கும் ஆயிரமாயிரம் மனங்களுக்கு மருந்தாகும் இந்த பாடல்
டி ஆர் இசையில் 1981ம் வருடம் வெளிவந்த’ ரயில் பயணங்கள்’படத்தில் இடம் பெற்ற… “வசந்த ஊஞ்சலிலே …அசைந்த பூங்கொடியே …
உதிர்ந்த மாயம் என்ன…
உன் இதய சோகம் என்ன..
உன் இதய சோகம் என்ன ..
நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா.’..
காதல் சோகப்பாடல் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் இந்தப் பாடலை தன் அனாயாசமான குரலில் பாடி அசத்தியிருப்பார்
1981ம் வருடம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்ததற்கு ஒரு காரணம் இந்தப் பாடல்.
இந்தப் பாடலுக்கு முன்னால் வரை அவர் பாடினாரென்றால் அது எம்ஜிஆர் ஆகவோ அல்லது சிவாஜியாகவோ தான் தோன்றும். ஆனால் இந்தப் பாடலில் டிஎம்எஸ் அவர்கள் தான் நம் கண் முன் வருவார். அந்த அளவுக்கு உருகி உருகிப் கணீர்ன்னு பாடி இருப்பார் டிஎம்எஸ்.
“பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது”… என்ன ஒரு ஆரம்ப ஆலாபனை,
காதலை தலைவன் முகபாவனையில் வெளிப்படுத்த, காதலி நாணத்தால் பதில் சொல்ல. மிக அற்புதமாக அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு தன் குரலின் மூலம் வசியம் செய்திருப்பார்.அந்தக்காலத்தில் ஒலிக்காத திருமண வீடே அந்தக் காலத்தில் இல்லை.
“பூ மாலையில் ஓர் மல்லிகை” உயிருள்ளவரை வாசமாய்… இருப்பதற்கு காரணம் டி எம் எஸ்.
நவரசங்களையும் தனது குரலில் பாடல்களாக வெளிப்படுத்திய டி எம் எஸ் . ஐயா அவர்களின் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு காவியம் .
இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவர் பாடிய பாடல்களின்மூலம் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.