
முதல்வர் விஜய் வேலை செய்யட்டும். வேலை செய்து நிரூபிக்கட்டும். அதற்குள் விமர்சிப்பது சரியாக இருக்காது. மக்கள் வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். நன்றாக பணி செய்யட்டும். தமிழக வெற்றிக் கழகம் கேரளாவில் துவங்கினால் என்ன பிரச்னை? ரஜினிகாந்த் இதயத்தில் இருப்பதை நாம் தோண்டி பார்க்க முடியாது. அவர் வருவதாக இருந்தால் வரட்டும். எந்த அரசியலுக்கும் வரட்டும். எல்லோரும் வந்து உலகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பயன்படட்டும்” என்றார்.
தமிழகத்தில் பா.ஜ.க வளரவில்லையே என்ற கேள்விக்கு, “இந்த உலகத்தில் பா.ஜ.க வளர நேரம் கொடுங்கள். அது வந்துதான் ஆக வேண்டும். இயற்கையாக வளர்வதற்கு நாட்களாகும். கேரளாவில் 1-ல் இருந்து ஜீரோவுக்கு சென்றோம். இப்பொழுது 3 வந்திருக்கிறது. இது 30 ஆக வரும். எங்களுக்கு தெரியும் படிப்படியாக வளர்கிறோம்” என பதிலளித்தார். காக்ரோச் ஜனதா பார்ட்டி குறித்த கேள்விக்கு, ”இது குறித்து பேசக்கூடிய ஆள் அல்ல நான். காக்ரோச் ஜனதா பார்ட்டி எங்கிருந்து வருகிறது? யாருக்காக வருகிறது? வந்தால் என்ன ஆகும் என பார்க்க வேண்டும். காக்ரோச் ஜனதா பாட்டி வெளிநாட்டு சதியாக இருந்தால், அதை டீல் பண்ணுவதற்கு நம்மிடம் வசதி இருக்கிறது. ஜனங்களுக்கும் அறிவு இருக்கின்றது. தலைவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது” என பதிலளித்தார்.