தவெகவிற்கு குட்பை? ஆதரவை வாபஸ் வாங்கும் இந்திய கம்யூனிஸ்ட்? மூத்த தலைவர் முத்தரசன் குட்டிக்கதை | Is CPI exits TVK alliance?Senior leader Mutharasan story creates buzz

Spread the love

Tamilnadu

oi-Nantha Kumar R

திருவாரூர்: ”ஆற்றுப்படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். இந்த பக்கத்தை விட அந்த பக்கம் கொஞ்சம் பசுமையாக தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்கள். முதலில் ஒரு குதிரை போகும். அடுத்து ஆடு போகும். ஒரு மாடு போகும். பிறகு மந்தையே போய்விடும். அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். இங்கையாவது கொஞ்சமாக பச்சை தெரியும். ஆனால் அங்கு ஒன்னுமே இருக்காது. ஆஹா வந்துவிட்டோமே. வந்த உடனே திரும்பினால் அந்த படுகை ஏத்துக்குமா? ஏத்துக்காதா? என்ன பண்றது.. கொஞ்ச நாளாவது இருந்துவிட்டாவது போவோமே என்று இப்படியான சூழல் உள்ளது” என்று திமுக கூட்டணியை விட்டு தவெக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ள நிலையில் அதன் மூத்த தலைவர் முத்தரசன் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நடந்த திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், மூத்த தலைவருமான முத்தரசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

is-cpi-exits-tvk-alliance-senior-leader-mutharasan-story-creates-buzz

”நான் அதிகமாக பணி புரிந்த அமைப்பு விவசாய சங்க அமைப்பு தான். அந்த அமைப்பின் மாநில செயலாளராக பணியாற்றி வரும் நல்ல நண்பர். எல்லாவற்றையும் காட்டிலும் கொள்கை பற்று கொண்டவர். ஆற்றுப்படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். அங்கேயே தான் மேயும். திடீரென அந்த பக்கம் கரையை பார்க்கும். இந்த பக்கத்தை விட அந்த பக்கம் கொஞ்சம் பசுமையாக தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்கள்.

முதலில் ஒரு குதிரை போகும். அடுத்து ஆடு போகும். ஒரு மாடு போகும். பிறகு மந்தையே போய்விடும். அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். இங்கையாவது கொஞ்சமாக பச்சை தெரியும். ஆனால் அங்கு ஒன்னுமே இருக்காது. காய்ந்து போய் கிடைக்கும்.

சரி வந்தாச்சு.. வந்த உடனே திரும்பினால் அந்த படுகை ஏத்துக்குமா? ஏத்துக்காதா? என்ன பண்றது.. கொஞ்ச நாளாவது இருந்துவிட்டாவது போவோமே என்று இப்படியான சூழல் உள்ளது. நான் யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை. தப்பாக நினைக்க வேண்டாம். பொதுவாக தான் சொல்கிறேன்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான முத்தரசனின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது. தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 2 தொகுதிகளில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் அதன்பிறகு தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கவில்லை. இப்படியான சூழலில் தான் விஜய்க்கு கொடுத்த ஆதரவை விரைவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாபஸ் வாங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *