தவெக அமைச்சரவையில் அருண் ராஜ்: விஜய்யின் பெர்சனல் சாய்ஸ் ஆனது எப்படி? | Arun Raj in the TVK Cabinet: How Did He Become Vijay’s Personal Choice?

Spread the love

முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் தவெக தலைவர் விஜய். அவரோடு 9 அமைச்சர்களும் பொறுப்பேற்கவுள்ளனர்.

கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான அருண் ராஜும் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்.

அருண் ராஜ் எப்படி அமைச்சர் ஆனார்?

தவெகவுக்குள் கட்சியைத் தாண்டி விஜய்க்கு பெர்சனலாக நெருக்கமானவர்கள் ஒரு சிலரே. அதில் அருண் ராஜும் ஒருவர். சேலத்தைச் சேர்ந்த மருத்துவரான அருண் ராஜ், 2010-11 வாக்கில் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ் ஆகினார்.

பதவியேற்பதற்கு முன்பான பயிற்சி காலத்தில் விஜய்யைச் சந்தித்திருக்கிறார். அப்போதிருந்தே விஜய்யுடனான நட்பைத் தொடர்ந்திருக்கிறார்.

அருண் ராஜ் | Arun Raj - TVK

அருண் ராஜ் | Arun Raj – TVK

விஜய் அரசியலுக்கு வரலாம் என யோசிக்கையில், அதை வெளிப்படையாகக் கூறி ஆலோசனைக் கேட்ட நபர்களில் அருண் ராஜும் ஒருவர். கட்சியின் வடிவமைப்பு, கொள்கை வகுப்பு என தவெக என்கிற கட்சி சிந்தனையாக இருந்த போதிலிருந்தே அதற்காகப் பங்காற்றியிருக்கிறார்.

அதனால்தான் கட்சிக்குள் வரும்போதே அவருக்கு முக்கிய பொறுப்பைக் கொடுத்தார் விஜய். தவெகவின் ஊடக முகங்களில் ஒருவராகவும் அருண்ராஜ் இருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *