‘தவெக அரசின் விஜய்யிஸ அரசியல்…’ – உடைக்கப்படும் மரபுகள்! |How TVK’s Vijayist Political Approach Is Challenging Established Traditions

Spread the love

நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையில் விஜய் படங்களின் ஆடியோ லாஞ்ச் பாணியில் குட்டி ஸ்டோரி வாசிக்கிறார். அந்த உரையை உருவாக்கிய அதிகாரிகள் எந்த மனநிலையில் யாரை ஈர்க்க வெள்ளை அறிக்கையில் குட்டி ஸ்டோரியை சொருகினார்கள்? யார் இதையெல்லாம் அனுமதிப்பது? எல்லாம் விஜய்யிஸ பாணியில் தானாக நடக்கிறது.

இதோ, இன்று சட்டப்பேரவையில் மேகதாது அணை குறித்து முதல்வர் விஜய் ஒரு வார்த்தையை கூட தன்னுடைய உரையில் பேசவில்லை. அதிலும் ஓர் அரசியல். அவையிலும் திமுக உறுப்பினர்கள் முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த விமர்சனங்களுக்கு மட்டும்தான் முதல்வர் பதிலளித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி உட்பட, தவெகவின் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும் பிரச்னைகள் குறித்தும் கூட முதல்வர் பேசவில்லை. இனியும் பேசமாட்டார். ஏனெனில், பேசினால் அவர் இருக்கும் நிலையிலிருந்து இறங்கிவிடுவார் என்று நினைக்கலாம்.

அவர் படங்களை போல அவருக்கு நிகரான எதிரிகள் என அவர் நினைப்பவரிடம் மட்டும்தான் மோத விரும்புகிறார்.

இவையெல்லாம்தான் விஜய்யிஸம். இதற்கு ஈடாக மற்ற எதிர்க்கட்சியனர் அரசியல் செய்வது அத்தனை எளிதல்ல. இன்றைய கூட்டத்தின் முடிவில் முதல்வர் விஜய் ஒரு ஆக்சனை செய்தார் பாருங்கள். தன்னுடைய படங்களின் இடைவேளையில் வில்லன்களுக்கு எதிராக விஜய் செய்யும் மேனரிசங்களை போல அத்தனை பெர்பக்ட்டாக இருந்தது அது.

அரசியல்வாதி ஆன பிறகும் சினிமா வழி தன்னிடம் இருக்கும் ‘கமர்ஶியல் வேல்யூ’க்களை விஜய் விட்டுக் கொடுக்கவில்லை. இந்த கமர்ஷியல்த்தனத்தின் இன்னொரு பெயர்தான் விஜய்யிஸம். இந்த ஆட்சி அதை மையமாக வைத்தும் ஓடுகிறது. விஜய்யை மீறி அவரை தாண்டி ஒரு கமர்ஷியலான அரசியலை கைகொள்வது மற்ற அரசியலர்களுக்கு பெரும் சவாலான காரியமாகவே இருக்கும். ஆரோக்கியமோ இல்லையோ இன்றைக்கு இந்த விஜய்யிஸ அரசியல் மைய இடத்தை பிடித்திருக்கிறது. இதன் அரசியல் விளைவுகளை எப்படியானது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *