மகளிர் உரிமைத் தொகை: “இதுதான் உங்க மாற்றமா?” – திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி | Women’s Entitlement Scheme: “Is this your change?” – DMK Leader Stalin Asks

Spread the love

2021-2026 தி.மு.க ஆட்சிக் காலத்தில் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 அவர்களது வங்கித் தொகையில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வந்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியில், தமிழக வெற்றிக் கழகம் இத்தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச. ஜோசப் விஜய், இத்திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 1,000 உரிமைத்தொகையை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைமுறையில் உள்ள திட்டத்தின்படி மே 2026 மாதத்திற்கான உரிமைத்தொகை (ரூ. 1,000) விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *