“காங்கிரஸ் வெளியேறினால் சூழல் மாறலாம்…”
ஆனால், `அப்படி செய்தால் அ.தி.மு.க முழுவதுமாக முடிந்துவிடும்’ என்று கூறி, எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு, சில எம்.எல்.ஏ-க்களிடம் த.வெ.க-வுக்குப் போவது குறித்து தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்கள்.
இது தெரிந்துதான் எடப்பாடி பழனிசாமி எங்கள் எம்.எல்.ஏ-க்களை புதுச்சேரியில் தங்கும்படி உத்தரவிட்டார். த.வெ.க-வுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்கக் கூடாது என்று அழுத்தமாகக் கூறி வரும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் அந்த விடுதியில்தான் இருக்கிறார்.
அதிலிருந்தே என்ன நடக்கிறது என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம். கட்சிக்குள் இப்போது நடக்கும் குழப்பத்திற்குப் பின்னால் பா.ஜ.க-வின் அரசியல் விளையாட்டு இருப்பதாகவும் சந்தேகிக்கிறோம். அதேசமயம் காங்கிரஸ் ஒருவேளை த.வெ.க-வில் இருந்து வெளியேறினால் எங்கள் நிலைப்பாடு மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்றார்.
இதற்கிடையில் முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் நேற்று இரவு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில், `த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு தி.மு.க எந்த இடையூறும் செய்யாது. அரசியலமைப்பு நெருக்கடி அல்லது மற்றொரு தேர்தலை தி.மு.க விரும்பவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.