த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர், தெரிந்த முகம் என்று பல விஷயங்கள் இருந்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
அதேநேரம், முசிறி தொகுதியில் விக்னேஷ் வென்றிருக்கிறார். லால்குடி பகுதியைச் சேர்ந்த இவர், அ.ம.மு.க-வில் இருந்து சில மாதங்களுக்கு முன்புதான் லால்குடி தொகுதியைக் குறிவைத்து, த.வெ.க-வுக்கு தாவினார்.

ஆனால், முசிறியில் முதலில் நிற்க நினைத்த கு.ப.கிருஷ்ணன், கடைசியில் லால்குடியில் நிற்க முடிவெடுத்து, விக்னேஷை முசிறிக்குத் தள்ளிவிட்டார். வேண்டா வெறுப்பாகத் தேர்தலை எதிர்கொண்ட விக்னேஷ் வென்றிருக்கிறார். இதனால், “தப்புக்கணக்கு போட்டுவிட்டோமே’ என்று புலம்பும் கு.ப.கிருஷ்ணன், வாரியத்தைக் குறிவைத்துக் காய் நகர்த்துகிறாராம்.