தவெக ஆதரவு விவகாரம்: காங்கிரஸ் விளக்கம் பரபரப்பு | Congress Defends TVK Support Amid DMK-AIADMK Alliance Buzz

Spread the love

தவெக ஆட்சியமைக்க திமுக – அதிமுக இணைகிறது… தவெகவில் இணைந்து திமுகவிற்கு காங்கிரஸ் துரோகம் போன்ற பேச்சுகள்… விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன.

இந்த நேரத்தில் காங்கிரஸ் மீதான விமர்சனங்களுக்கு தனது எக்ஸ் பதிவில் பதிலளித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்.

“தேர்தல் முடிவு வந்த அன்றே ராகுல் காந்தி ஸ்டாலினுக்கும் மம்தா பானர்ஜிக்கும் போன் செய்தார். அடுத்த நாள் காலையிலேயே மம்தாவுக்குப் பகிரங்கமாக ஆதரவும் தெரிவித்தார். வங்காளத்தில் பாஜக 100 இடங்களைத் திருடிவிட்டது என்றும் சொன்னார்.

ஸ்டாலின், ராகுல் காந்தி

ஸ்டாலின், ராகுல் காந்தி

தமிழகத்தில் மக்களின் தீர்ப்பை மதிக்கவும், ஒரு நிலையான ஆட்சி அமையவும், முக்கியமாக என்.டி.ஏ கூட்டணியை வெளியே வைக்கவுமே காங்கிரஸ் கட்சி தவெக-வை ஆதரித்தது.

ஆனால் இப்போது “கோடி’ மீடியாக்களும் (Godi media), திமுக ஆதரவு ஊடகங்களும் காங்கிரஸைக் குற்றம் சொல்கின்றன. நிஜத்தில், பாஜகவின் ஆசியோடு திமுக இப்போது அதிமுக-விடம் பேசிக் கொண்டிருக்கிறது. இது நடைமுறையில் வேறு பெயரில் இருக்கும் என்.டி.ஏ கூட்டணிதான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *