தவெக: “என்னை இப்படி மெண்டல் டார்ச்சர் பண்ணாதீங்க” – அயலக மாணவர் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ! | A student from abroad has posted a video criticizing Minister Vanni Arasu.

Spread the love

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக கடந்த மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “இதுவரை மாணவர் பாரதி தாசனுக்கு ரூ.48,22,097/-ஐ மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, மாணவருக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதற்குரிய சரியான பயன்பாட்டு விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்காமல் உள்ளார். மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமலேயே கூடுதல் தொகை பெற சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் மாணவர் தவறான தகவல்களை கொடுத்து வருகிறார்.” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

வன்னி அரசு

வன்னி அரசு

அமைச்சரின் விளக்கத்துக்குப் பிறகு மாணவர் பாரதிதாசன் ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், “எனக்கு அரசு நிதி வழங்கியது 2025-ம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம். எனது இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள், பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான ஆராய்ச்சி நிதி கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறேன். எனது பேராசிரியர் கடந்த மார்ச் 24, அன்று இதற்கான விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 21 அன்று ஆராய்ச்சி தொடர்பான கட்டண பில்கள் மற்றும் விலைப்பட்டியல்களை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்தேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *