தவெக: “முந்தைய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறதா?” – அமைச்சர் அருண் ராஜ் பதில் | TVK: “Are stickers being pasted over schemes from the previous government?” – Minister Arun Raj responds.

Spread the love

தமிழ்நாட்டில் MBBS தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு, கலந்தாய்வுக்கான அட்டவணையும் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றதால், அரசுக்கான இடஒழுக்கீடு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு இடஒழுக்கீடு பாதிக்கப்பட்டது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசப்படும். இருப்பினும், தற்போதைய அரசின் தீவிர முயற்சியால், தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) ஆய்வுகளுக்குப் பின், மூன்று அரசு மருத்துவமனைகளில் தலா 50 இடங்கள் வீதம் இந்த ஆண்டு புதிதாக 150 MBBS இடங்கள் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளன.

அருண் ராஜ்

அருண் ராஜ்

சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் 4.5 ஆண்டுகளுக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. எனினும், போதிய ஆதாரங்களைச் சேகரிக்க மீண்டும் ஒரு புதிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருத்துவத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகள் மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்படும்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *