’தவெக-வின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சிகளின் காப்பி பேஸ்ட் பட்ஜெட்’ – வானதி சீனிவாசன் சாடல்

Spread the love

தவெக அரசின் பட்ஜெட் தொடர்பாக பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டசபையில்  நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பெயர்களை மட்டும் மாற்றி நிதி ஒதுக்கீட்டினை குறைத்தும், சில திட்டங்களுக்கு கூடுதலாகவும் ஒதுக்கியிருக்கிறது. த.வெ.க அரசின் பட்ஜெட்டில் மாற்றம் கிடைக்கும் என்று மக்கள் காத்திருந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது. வெறும் காற்றடைத்த பலூனாக மட்டுமே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

இலவச மடிக்கணினி, திருமண நிதி உதவி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அனைத்தும் கடந்த அரசுகளின் திட்டங்களின் தொடர்ச்சியே தவிர, இந்த அரசின் புதிய சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் எந்தவிதமான புதுமையும் இதில் இடம்பெறவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, குடும்பத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற வாக்குறுதிகளை அளித்துதான் த.வெ.க ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்த முக்கியமான வாக்குறுதிகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *