அவர், தனது காரில் வர அனுமதி கோரிய நிலையில், அதை ஏற்க மறுத்த போலீஸார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தங்களது வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். சுமார் 6 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது. பின்னர், அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்,

“த.வெ.கவில் இணையச் சொல்லியும், எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லியும் வற்புறுத்தினார்கள். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. தி.மு.க-விலேயே இருப்பேன். அதன் காரணமாகவே நான் கைது செய்யப்பட்டுள்ளேன்” என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்து 7வது முறையாக எம்.எல்.ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம், தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.