தவெகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்க போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பத்தில் உசிலம்பட்டியில் வைத்து தொடங்கலாமா என அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். உசிலம்பட்டியில் பெண்களுக்கு சீர் கொடுக்கும் கலாச்சாரம் அதிகம் நடக்கும் பகுதியாக இருப்பதால் அதனால் இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் இருந்து துவங்கலாம் என நினைத்த அரசு அதற்கான ஆய்வு பணிகளில் ஈடுபட்டது.
ஆனால் உசிலம்பட்டியில் அதிகளவிலான தெருக்கள் குறுகலாக இருப்பதால் முதல்வர் விஜய்யை காண வரும் கூட்டத்தை கட்டுபடுத்துவது சிரமமாகி விடும் என்பதால் மதுரையில் வைத்து தொடங்கலாம் என ஆலோசிக்கப்பட்டு அரசு தரப்பில் முடிவெடுக்கபட்டுள்ளது.

தொடர்ந்து வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி திங்ககிழமை மதுரைக்கு வரும் முதலமைச்சர் விஜய் ராஜாஜி மருத்துவமனையில் பிறக்கு குழந்தைகளுக்கு நேரடியாக சென்று தங்க மோதிரம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி ராஜாஜி மருத்துவமனையில் சுற்றிலும் சாலைகள் அமைக்கு பணிகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் மருத்துவமனைக்குள்ளும் கற்களை அமைக்கு பணிகளும், தூய்மை படுத்தும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.!