தாராபுரத்தில் இன்று ஸ்டாலின் பிரச்சாரம்.. காலை ரோடு ஷோ மாலை பொதுக்கூட்டம்.. திமுக மாஸ் திட்டம் | DMK Chief MK Stalin to will be campaign in Dharapuram today

Spread the love

Tamilnadu

oi-Pavithra Mani

தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. கடந்த நேற்று முன்தினம் முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தாராபுரத்தில் இன்று பிரச்சாரம் செய்யவுள்ளார்.

தமிழக அரசியல் களம் இடைத்தேர்தல் பரபரப்பால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளும் அதிமுகவின் சிட்டிங் தொகுதியாக இருந்தது. அந்த கட்சி எம்எல்ஏவாக இருந்தவர்களே ராஜினாமா செய்து தவெக வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். அதனால் தவெகவை தோற்கடிக்க அதிமுக பணியாற்றுகிறது.

Dharapuram Stalin

தாராபுரத்தில் ஸ்டாலின் பிரச்சாரம்

தவெகவை வீழ்த்தி தங்களின் செல்வாக்கை நிரூபிக்க முன்னாள் அமைச்சர்கள் படையுடன் திமுக வேகம் காட்டுகிறது. கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் கட்சியினரும் தங்கள் பலத்தை காட்டுவதற்காக களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது. முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக எடப்பாடி பழனிசாமி, சிபிஎம் சண்முகம், நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோர் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் இன்று பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக நேற்று இரவு அவர் சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்தார். பிறகு சாலை மார்க்கமாக அவர் தாராபுரம் சென்றார். திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து காலை 10.30 மணி முதலே வீதி வீதியாக தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபடவுள்ளார்.

மாலை பொதுக்கூட்டம்

அமராவதி சிலையில் இருந்து தொடங்கி பொள்ளாச்சி சாலை, பெரிய கடை வீதி வழியாக அவர் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது ரோடு ஷோவாகவும் செல்லவுள்ளார். மாலை 5.30 மணியளவில் உடுமலை சாலை மல்லி ரிசார்ட் அருகே திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *