தாராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மெகா சொதப்பல்.. கொந்தளித்த முகவர்கள்.. அதிகாரிகளால் அப்செட் | Agents slams Officials over poor arrangement in Dharapuram counting center

Spread the love

Tamilnadu

oi-Pavithra Mani

தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. பிரச்சாரத்தில் தொடங்கி வாக்கு எண்ணும் மையம் வரை பரபரப்பு ஓயவில்லை. தாராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை முறையாக நடப்பது சந்தேகமாகியுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்து தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு தவெகவில் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். தாராபுரத்தில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 13 பேர் சுயேச்சைகள். தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா போட்டியிடுகிறார்கள். தவெக, அதிமுக, திமுக இடையே தான் போட்டியே.

Dharapuram Agent

தாராபுரம் வாக்கு எண்ணும் மையம்

தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்கு பதிவானது. தாராபுரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். இந்த பணியில் 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காலை 6.30 மணியில் இருந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பிரதான கட்சி முகவர்கள் வருகை புரிந்தனர். முகவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட கியூ.ஆர். கோட் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். தாராபுரம் தொகுதிக்கான திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் மையத்தில் முகவர்களுக்கு, எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் முகவர்கள் கோபமடைந்தனர்.

முகவர்கள் கொந்தளிப்பு

இதுகுறித்து முகவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “தாராபுரத்தில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அவர்களின் முகவர்களுக்கான ஏற்பாடு செய்யப்படவில்லை. பொதுவாக முகவர்களுக்கு நாற்காலி போடப்படும். ஆனால் முகவர்கள் உட்காருவதற்கு வசதி இல்லை. ஏன் வாக்கு எண்ணும் மையத்தில் நிற்பதற்கு கூட இடமில்லை. 22 வேட்பாளர்களின் முகவர்கள் ஒன்றாக நிற்கவே முடியாது. மிகுந்த நெருக்கடியாக உள்ளனர். வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவது சந்தேகம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *