தாராபுரம்: 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; கைதானது TVK நிர்வாகியா? சர்ச்சையும் MLA விளக்கமும்!

Spread the love

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஹாரூன் ரஷீத், 11 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஹாரூன் ரஷீத் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான ஹாரூன் ரஷீத், த.வெ.க-வைச் சேர்ந்த நிர்வாகி என்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ சத்தியபாமாவின் ஆதரவாளர் என்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின. இது குறித்து சத்தியபாமா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், சத்தியபாமாவிற்கு ஆதரவாக தாராபுரத்தில் த‌.வெ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் பேனர்களில் ஹாரூன் ரஷீத் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தாராபுரம் த.வெ.க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தை சத்தியபாமா திறந்து வைத்த வீடியோக்களை எதிர்க்கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர்.

போக்சோ வழக்கில் கைதான ஹாரூன் ரஷீத்

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.எல்.ஏ சத்தியபாமா, “தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனக்கும் த.வெ.க ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பொய்யான தகவல்களை அவதூறாக சிலர் பரப்பி வருகின்றனர். அந்த நபர் யார் என்றே எனக்குத் தெரியாது.

சத்தியபாமா

கட்சிக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் த.வெ.க- வில் ஆட்டோ ஓட்டுநர் சங்கமே கிடையாது. இதில் எந்த உண்மையும் இல்லை” என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். சத்தியபாமாவின் இந்த மறுப்புக்கும் எதிர்க்கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *