தாளவாடி சாணியடித் திருவிழா: பாரம்பர்ய நம்பிக்கையைதாண்டி மருத்துவர்கள் சொல்லும் எச்சரிக்கைகள் என்ன? -erode, thaalvaadi saaniyadi festival health issues controversy .

Spread the love

இது குறித்து நம்மிடம் பேசிய ஈரோடு மாவட்ட பொதுநல மற்றும் தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் சிலர், “மாட்டுச் சாணம் விவசாயத்திற்குச் சிறந்த உரம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மாட்டுச் சாணத்தை நேரடியாக மனித உடலில் பூசுவதால் மருத்துவப் பயன்கள் கிடைக்கும் என எந்த ஆய்வுகளும் நிரூபிக்கவில்லை. ​மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் மாட்டுச் சாணத்தில் உள்ளன.

சாணத்தை உடலில் பூசுவதாலும், கூட்டமாக நின்று ஒருவர் மீது ஒருவர் வீசுவதாலும் அவை வாய், மூக்கு மற்றும் கண்களுக்குள் சென்று கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கண் தொற்றுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக, உடலில் சிறிய காயங்கள் அல்லது கீறல்கள் உள்ளவர்களுக்குக் கடுமையான சருமத் தொற்றுகளும் ஒவ்வாமையும் ஏற்படும் அபாயம் உள்ளது.

பாரம்பர்ய வழிபாடு என்பதால் அதில் பங்கேற்கும் மக்கள் தங்களின் உடல்நலனில் அக்கறை கொள்வது அவசியம். உடலில் காயங்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள் சாணியடி நிகழ்வைத் தவிர்ப்பதும், விழா முடிந்தவுடன் கிருமிநாசினி சோப்பு பயன்படுத்திச் சுத்தமான நீரில் குளிப்பதும் அவசியம்” என்றனர்.

சாணியடி திருவிழா

சாணியடி திருவிழா

அரசின் தாளவாடி பகுதி வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், “கும்டாபுரம் கிராமத்தில் மட்டும்தான் இந்தத் திருவிழா நடக்கிறது. வெளியூர்களில் இருந்து அதிகளவில் மக்கள் வருகிறார்கள். மாட்டுச் சாணத்தை உடலில் பூசுவதன் மூலம் உண்ணிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படும் அபாயமும் இருக்கிறது. வழிபாடு முடிந்ததும் உடனடியாக உடலைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், காய்ச்சல் அல்லது நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் செவிலியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *