இதனை நம்பிய ஷீலா மற்றும் அவரது கணவர், கடந்த 15.03.2023 முதல் 15.07.2023 வரையிலான காலகட்டத்தில் தங்கராஜின் வங்கிக் கணக்குகள் மற்றும் கூகுள் பே , போன் பே மூலமாக மொத்தம் 29 லட்சத்தை அனுப்பியுள்ளனர்.
மேலும், தங்களது உறவினர்களான மூவருக்கும் வேலை வாங்கி கொடுக்க சொல்லி, தலா 7 லட்சம் ரூபாய் என மொத்தம் 21 லட்சத்தையும் தங்கராஜின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக ரூ.50 லட்சம் பணம் கைமாறியுள்ளது.
இதனிடையே, கடந்த 10.04.2023 அன்று தங்கராஜை நேரில் சந்தித்தபோது, எடப்பாடி அரசு கலைக் கல்லூரியின் துணை முதல்வர் அன்பழகன் என்பவரை சந்திக்குமாறு அவர் கூறியுள்ளார். அதன்படி, அன்பழகனைச் சந்தித்தபோது அவர் ஒரு பணி நியமன ஆணையை காண்பித்து, வேலைக்கான ஆணை மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் வரும் என்று நம்பும்படி கூறியுள்ளார். பின்னர் ஜெயப்பிரியா என்பவருக்கு ஓர் அரசு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.