இதனைப் பயன்படுத்தி, அந்த வார்டன் இரவு நேரங்களில் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவிகள் கல்லூரி பொறுப்பு தாளாளர் மற்றும் சில ஆசிரியர்களிடம் சொன்னபோது, அவர்கள் மாணவிகளைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதோடு, ‘அனுசரித்துச் செல்லுங்கள்’ எனக் கூறியதாக, மாணவிகள் குற்றம்சாட்டுகிறார்கள். தொடர்ச்சியாக கடந்த 6 மாதங்களாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதால், பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் மாணவிகள் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி பொறுப்பு தாளாளர் செல்வகுமார் உட்பட 6 பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் ரீதியாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதனை அடுத்து தற்போது புகார் கொடுத்த மாணவி உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து தற்போது பயிலும் கல்லூரியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தங்களை உடனடியாக வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.