டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து – ஏர்வாடி அருகே சோகம்!

Spread the love

விபத்தில் பலியானவர்கள்

விபத்தில் பலியானவர்கள்

இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி இருசக்கர வாகனத்தில் மோதிய வேகத்தில் டூவீலரில் பயணித்த மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதனால் டூவீலரில் பயணித்த லாடசாமி, பஞ்சவர்ணம், புல்லாணி ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த ஏர்வாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இந்த கோர விபத்து குறித்து ஏர்வாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்குள்ளான டூவீலர்

விபத்துக்குள்ளான டூவீலர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *