
நெ ல்லிக்கனியின் அறிவியல் பெயர் பில்லாந்தஸ் எம்பிளிகா Phyllanthus emblica, ‘Indian Gooseberry அல்லது ‘Amla’ என்று இது அழைக்கப்படுகிறது.
மூத்த தமிழ்ப் புலவரான ஔவையார் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டுமென்பதற்காக கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் தனக்குக் கிடைத்த அந்த நெல்லிக்கனியை ஒளவைக்கு வழங்கியதாக சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
அத்தகைய சிறப்புவாய்ந்த நெல்லிக்காய் ஆயுள் காய், ஆயுள் தரும் பழம், பித்த நிவாரணி, உடல் இளமையைக் காக்கும் மருந்து, அறிவு மற்றும் ஆரோக்கியத்தின் சின்னம் என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை, இது ஆரோக்கியத்தின் திறவுகோல், சாகா வரம் தரும் அதிசயக் கனி மற்றும் காயகற்ப மூலிகையாகக் கருதப்படுகிறது. உடலின் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், சுபம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெல்லிக்கனியை மக்கள் பயன்படுத்தி வந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயுர்வேத மருத்துவத்திலும் நெல்லிக்கனி பல்வேறு சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
நவீன மருத்துவமும் நெல்லிக்கனிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதை பார்க்கி றோம். நெல்லியின் அற்புத மருத்துவ குணங் களே இதற்கு காரணம்.
சித்தமருத்துவத்தில் நெல்லிக்காய்
என்றும் இளமையுடன் இருக்க… நீரிழிவு கட்டுப்பட இரத்த அழுத்தம் சீராக… சருமம் பளபளக்க… கூந்தல் மினுமினுக்க நெல்லிக் காய் போதும் என்ற வாசகங்களையும், வர்த்தகங்களையும் இன்று நிறைய பார்க்க முடிகிறது. அந்தஅளவுக்கு நெல்லியின் தாக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
நெல்லிக்காயில் சிறிய நெல்லி, பெரிய நெல்லி என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டிலும் சத்துக்கள் இருந்தாலும், பெரிய நெல்லியில் அதிகமான மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றன.
சித்த மருத்துவக் கோட்பாட்டின்படி அறுசுவை உணவுகளை உண்ணும்போது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இருக்கும். அந்த வகையில் நெல்லிக்காய் புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, இனிப்பு போன்ற பல சுவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள சிறப்புமிக்க மூலிகையாகும்.
வாதம், பித்தம், சுபம் என்ற மூன்று உடல் தாதுக்களின் ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தும் திரிபலா எனும் மருந்தில் நெல்லியின் பங்கு அதிகம்.
நெல்லிக்காயில் என்ன இருக்கு?
100 கிராம் நெல்லிக்காயில் 20 ஆரஞ் சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி அளவு அடங்கியுள்ளது. நெல்லியில் கலோரி, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், கொழுப்பு போன்றவை உள்ளன. மேலும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ. வைட்டமின் இ, இரும்புச்சத்து, கால்சியம். பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதால், இது ஒரு ‘சூப்பர்ஃபுட்’ உணவாகக் கருதப்படுகிறது.
சித்த மருத்துவத்தில் பல்வேறு உடல் குறைபாடுகளைச் சீர்செய்ய நெல்லிக்கனி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக உடல் சூட்டைக் தணிக்க நெல்லிக்கனி பரிந்துரைக்கப்படுகிறது. ‘நெல்லிக்காய்க்குப் பித்தம் நீங்கும். அதன் புனிப்பால் செல்லுமே வாதம்’ என கூறப்படும் சித்த மருத்துவக் குறிப்புகளில் நெல்லிக்காய் குளிர் தன்மை’ கொண்டதாக வரையறுக்கிறது. கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டினால் வரக்கூடிய வாய்ப்புண், வயிற்றுப்புண், கண் எரிச்சல், அமிலத் தன்மை, தோல் எரிச்சல் போன்ற பிரச்னைகளைக் குறைக்கிறது.
நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி, பாலிஃபினால்கள், டானின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடல் செல்களைப் பாதுகாத்து, சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. நெல்லியிலுள்ள பெக்டின் மற்றும் நார்ச்சத்துகள் செரிமானத்தைச் சீராக்க உதவுகின்றன. கல்லீரல் மற்றும் செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதால், உடலில் கழிவுகள் தேங்காமல் வெளியேறு கின்றன. இதனால் மலச்சிக்கல் அபாயம் குறைகிறது.
நெல்லியின் மருத்துவ குணங்கள் வயிறு உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப் பதோடு அதில் உள்ள வைட்டமின் சி தோல் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இதனால் தோல் ஆரோக்கியம், முடி வளர்ச்சி என உடலின் அனைத்து செயல்பாடுகளையும் சீரமைக்க செய்கிறது. நெல்லியில் உள்ள எலாஜிக் அமிலம், எம்பிலிகேனின் A மற்றும் B போன்ற முக்கிய டானின்கள், உடல் செல்களை ஆக்சிடேட்டிவ் சேதத்திலிருந்து oxidative damage) பாதுகாத்து, முதுமை வேகத் தைத்தாமதப்படுத்த உதவுகின்றன. மேலும் இதில் உள்ள காலிக் அமிலம் உடலின் தேவையற்ற வீக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை C தினமு நெல்லி தனியாகே பாகற் சேர்த்து எடுத்துக் கொண்டது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு நெல்லிக்காயை தனியாகவோ அல்லது பாகற்காயுடன் சேர்த்து சாறாக்கியோ எடுத்துக் கொள்ளலாம். இது இன்சுலின் சுரப்பைத் தூண்டி, சர்க்கரை நோயின் தாக்கத் தைக் கட்டுப்படுத்த உதவு கிறது. ஏற்கெனவே நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக் கும் நெல்லிக்காய் பயனளிக்கக்கூடும். ஏனெனில் இதில் உள்ள குரோமியம் மற்றும் நார்ச்சத்துகள் உணவில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ் உட்கிரகிப்பைக் குறைத்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்த உதவுகின்றன.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறைகிறது. மேலும் ஏற்கெனவே உள்ள கொழுப்புகளை பித்த அமிலமாக மாற்றி, பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் தடுக்க செய்கிறது. மேலும் ரத்த நாளங்களைப் பாதுகாத்து, இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
இதில் உள்ள குவெர்செடின் மற்றும் கேம்ப்ஃபெரோல் போன்ற பிளாவனாய்டுகள், நுண்ணுயிர் தொற்றுகளிலிருந்து பாது காக்கும் ஆற்றல் கொண்டவை. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
இதிலுள்ள இரும்புச் சத்து மற்றும் கால் சியம், ரத்தத்தை அதிகரித்து எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
குளூட்டமிக் அமிலம், புரோலின், அஸ்பார்டிக் அமிலம் போன்ற அமினோ நோயாளிகள் மும் ஒரு மிக்காயை வோ அல்லது காயுடன் சாறாக்கியோ கொள்ளலாம்.
அமிலங்கள், திசுக்களின் சேதத்தைக் குறைத்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றன. மேலும் இளவயதிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகின்றன.
நெல்லிக்காய் எப்படி சாப்பிடலாம்
நெல்லிக்காயில் ஜூஸ், சர்பத், துவையல், சட்னி, ஊறுகாய், தொக்கு. சாதம், ரசம், அல்வா என பலவிதமான உணவுகளைத் தயாரிக்கலாம். அன்றாட உணவில் நெல்லிக்காயை ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக் கியமாக பாதுகாக்கலாம்.
பத்து நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கி சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இது உடலைப் பலப்படுத்தும் இயற்கையான டானிக்காக செயல்பட்டு, நோய் கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும். வளரும் குழந்தைகளுக்கு நெல்லிக்காயை
லேகியம் போல் செய்து கொடுத்தால் உடலுக்கு போஷாக்கு கிடைக்கும்.
நெல்லிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி, பின்னர் பொடியாக்க வேண்டும். அந்தப் பொடியை பாசிப்பயறு மாவுடன் கலந்து உடலில் தேய்த்து குளித்தால் சருமம் பளபளப்பாகும். நெல்லிக்காயை மையாக அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறைய உதவும்.
நெல்லிக்காய் சீசன் வரும்போது அதிகமாக வாங்கி, அதை உலர்த்தி பொடியாக்கி வருடம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் பக்குவப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு இளமையைத் தக்க வைத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.