திராவிடக் கட்சிகளின் கோட்டைகளில் `விசில்’ சவால் – மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளின் தேர்தல் வரலாறு!

Spread the love

தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்ரின் எழில்மலை 62 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59 ஆயிரத்து 838 வாக்குகள் பெற்று 3வது இடத்தையும் பிடித்திருந்தார்.

தாராபுரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதி கடந்த 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு தொகுதி தனித் தொகுதியாக வரையறுக்கப்பட்டது. முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்த 1951 ஆம் ஆண்டு சுயேட்சை எம்எல்ஏ வெற்றி பெற்ற நிலையில், அதன் பின் நடந்த 17 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றிருக்கின்றன.

1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவும் 1977, 1980, 1984, 1991, 2011, 2026 ஆகிய தேர்தல்களில் அதிமுகவும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கின்றன.

 மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

தவிர 1957, 1962 ஆகிய தேர்தல்களில் தனித்தும், 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலும் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. 2001ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் பாமக-வும் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றது. கடைசியாக 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 81 ஆயிரத்து 100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராணி 64 ஆயிரத்து 373 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், தவெக வேட்பாளர் கவுரி சித்ரா 46 ஆயிரத்து 438 வாக்குகள் பெற்று மூன்றாம் இடைத்தையும் பிடித்திருந்தார்.

இவ்விரு தொகுதிகளும் திமுக, அதிமுக, மற்றும் புதிதாக உருவெடுத்துள்ள தவெக ஆகியவற்றுக்கு இடையேயான முக்கியப் பலப்பரீட்சைக் களமாக மாறியிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *