திராவிடத்தால் தமிழ் சமூகம் அடைந்த பயன்.. இளைஞர்களுக்கு கடத்துவோம்.. அமெரிக்காவில் பேசிய செந்தில்வேல் | “Preserve Dravidian Legacy”: Journalist Senthilvel Calls for Passing On Gains to Youth at US Event

Spread the love

Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

நியூ ஜெர்சி: அமெரிக்காவில் நடைபெற்ற திரைகடல் ஓடியும் திராவிடம் தேடு என்ற கருத்தரங்கில் திமுக ஆதரவாளரும், ஊடகவியலாளருமான செந்தில்வேல் கலந்து கொண்டு, திராவிட இனத்தால் தமிழ் சமூகம் அடைந்த பயன்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசிக்கும் தமிழர்களால் செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் திராவிட நாள் கருத்தரங்கு, ‘திரைகடல் ஓடியும் திராவிடம் தேடு’ என்னும் கருப்பொருளில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கருத்தரங்கையொட்டி அமெரிக்காவில் நியுசெர்சி, சிகாகோ, அட்லாண்டா, டாலஸ், சான் பிரான்ஸ்கோ, வாசிங்கடன் DC ஆகிய நகரங்களில் பெரியார் பிறந்தநாள் நடை ஓட்டமும் நடைப்பெற்றது.

Dravidian Legacy

அமெரிக்காவில் இயங்கும் திராவிட அமைப்புகளான வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர் நலச் சங்கம் (NRTIA – USA), பெரியார் பன்னாட்டமைப்பு, பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் (PASC) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய “திராவிட நாள்” கருத்தரங்கில் ஊடகவியலாளர் செந்தில்வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்தக் கருத்தரங்கை குழுவின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன், செயலாளர் நியுசெர்சி பாலா, பொருளாளர் இரவி பெருமாள்சாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். செப்டம்பர் மாதம் என்பது பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், திராவிட முன்னேற்ற கழகம் துவங்கிய நாள் என பலச் சிறப்புகளை கொண்ட முப்பெரும் விழாவாக இக்கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, திராவிடத்தின் சிறப்புகளை கூறி கருத்தரங்கை துவக்கி வைத்தார். கருத்தரங்கில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழர்கள் திராவிடத்தை நாட வேண்டிய அவசியம் என்றும், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்றைய சூழலில் அனைவரும் திராவிட கொள்கைகளை, தமிழர்களுக்கு அதனால் ஏற்பட்ட பயன்களை அனைவருக்கும் சொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதை சொல்லி திராவிடம் வெல்லட்டும் எனக் கூறி வழங்கிய வாழ்த்து செய்தி ஒலிப்பரப்பட்டது.

1. கருத்தரங்கில் பத்து வயது நிரம்பிய ஆதவன் “We are Dravidians” என்னும் தலைப்பில் பேசினார்.

2. ⁠திராவிட இனத்தின் வரலாறாக அயோத்திதாச பண்டிதர் காலத்திலிருந்து, நீதிக் கட்சி, தந்தை பெரியார், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றால் தமிழினத்திற்க்கும், தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்க்கும் ஏற்ப்பட்ட பயன்களை அம்பேத்கர் கிங் ஸ்டி சர்க்கிள் அமைப்பை சேர்ந்த கார்த்தி, மருத்துவர் சோம இளங்கோவன், ம வீ கனிமொழி, நியுசெர்சி பாலா, இரவி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர்.

3. குழந்தைகள் திரவிட தலைவர்களை ஓவியமாக்கும் போட்டி, இளம் பருவ வயதினரான சிகாகோ ஹரி, லண்டன் மீரா ஆகியோர் திராவிட கொள்கைகளின் சிறப்புகளை இந்த கால தலைமுறைக்கு ஏற்றவாறு சமூக வலைத்தளங்களில் செயல்படுவதை விளக்கினர்.

4. இறுதியாக செந்தில்வேல், திராவிட இனத்தால் தமிழ் சமூகம் அடைந்த பயன்களை, அதன் கொள்கைகளை நம் குடும்பத்தில் பேச வேண்டிய அவசியத்தையும், அடுத்த தலைமுறைக்கு இதை எடுத்த செல்ல வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருப்பதை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

இந்தக் கருத்தரங்கிற்கில் லண்டன், அமெரிக்காவின் நியுயார்க், நியு ஜெர்சி, டெலவேர், பென்சில்வேணியா, விர்ஜீனியா, கரோலினா, மில்வாக்கி, டாலஸ் ஆகிய மாகாணங்களிலிருந்து அமெரிக்க தமிழர்கள் குடும்பங்களோடு கலந்து கொண்டனர். இறுதியாக இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் தொடரந்து அமெரிக்காவில் நடத்துவோம் என்றும், திராவிட கொள்கைகளை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வோம் என ஒவ்வொருவரும் உறுதி தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *