திருச்சி: இரண்டு சிறுவர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை… முன்விரோதமா பழிக்குப் பழியா?

Spread the love

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே புள்ளம்பாடி வாய்க்கால் கரையில் நேற்று இரண்டு உடல்கள் கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சமயபுரம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற சமயபுரம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது, அங்கு வெட்டிக் கொல்லப்பட்ட இரண்டு பேருமே சிறுவர்கள் என்பதை அறிந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் ராகுல் (வயது: 17), விஷால் (வயது: 17) என்பது தெரிய வந்திருக்கிறது. இருவரும் அந்த பகுதியில் கூலிவேலை செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ragul

இந்நிலையில், இந்த சிறுவர்கள் இருவரையும் கொலை செய்தது யார், எதற்காக இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியது என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக மற்றும் பழிக்கு பழியாக இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *