‘திருச்சி கிழக்கில் விஜயின் வெற்றி செல்லாது!’ – தி.மு.க வேட்பாளர் வழக்கு – trichy east dmk candidate case against Vijay win

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கட்சி ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இந்நிலையில், திருச்சி கிழக்கில் எம்.எல்.ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், அவரை எதிர்த்து நின்று தோல்வியை தழுவிய தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜ், விஜய்க்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.

iniko iruthayaraj

iniko iruthayaraj
d.dixith

அந்த வழக்கில், “தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை வேட்ப மனுவில் மறைத்து வருமான வரி பாக்கி இல்லை என கூறியுள்ளார். சமூக வலைதளம் மூலம் பிரசாரத்திற்கு எவ்வளவு செலவு செய்தார் என்ற விவரங்களை இதுவரை விஜய் தெரிவிக்கவில்லை.

கட்சி அடையாளங்களை அணிந்து சென்று முழங்காலிட்டு தேவாலயத்தில் பிரசாரம் செய்தார். இப்படி, பல்வேறு விதிமீறல்களை செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும். தேர்தல் வழக்கு முடியும் வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது” என்று வழக்கு தொடுத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *