திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோயில் : திருமணத் தடை நீக்கும் ஆயில்ய நாக பூஜை! | mutharasanallur guruvayur temple

Spread the love

சிவகுமார் உடனடியாக அந்த இடத்தில் கோயில் எழுப்ப ஏற்பாடுகளைச் செய்தார். அதன்படி அங்கே அற்புதமான குருவாயூரப்பன் திருக்கோயில் உண்டானது.

குருவாயூருக்குச் சென்று அந்தக் கிருஷ்ணனை தரிசனம் செய்த திருப்தி இங்கு தரிசனம் செய்வதன் மூலம் பக்தர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. எனவே தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்களிலிருந்தும் இந்த ஆலயம் குறித்துக் கேள்விப்பட்டு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள் பக்தர்கள்.

குருவாயூர் கோயிலில் என்ன பூஜை முறையோ அதுதான் இங்கும். காலை 6 மணிக்கு சந்நிதி திறக்கப்படும். காலை 6.15 மணி வரை நிர்மால்ய தரிசனம். காலை 6.15 சுவாமிக்கு அபிஷேகம், 6.45 மணிக்கு மலர் நிவேதம். 7 மணிக்குச் சின்னதாக ஒரு பூஜை. 9.30 மணிக்கு உச்சிக்கால பூஜை. அதையடுத்து 11 மணிக்கு சந்நிதி மூடப்படும்.

இங்கு கிருஷ்ண ஜயந்தி கோலாகலமாக நடைபெறும். அதேபோல கார்த்திகை மாதத்தில் ‘குருவாயூர் ஏகாதசி’யும் மிகவும் பிரசித்தம்.

முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோயில்

முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோயில்

விழாக்காலங்களான 33 நாள்களில் சுவாமி வெளிப்பிராகாரத்தில் உலா வருவார். இங்கு ஐயப்பனுக்கும் சந்நிதி இருப்பதால் நவம்பர் 15-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை மண்டல கால பூஜையும் வெகு விமர்சையாக நடைபெறும். ஜனவரி 15-ம் தேதி மகரஜோதி தரிசனமும் அதை ஒட்டி விசேஷ பூஜைகளும் நடைபெறும். ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகை இங்கு பத்துநாள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் இங்கு வேட்டைக்கொருமன், கருப்பண்ண சுவாமி, பிள்ளையார், பக்கத்தி லேயே கிராம தேவியாக பராசக்தி ஆகியோருக்கும் சந்நிதி உள்ளது. மகா பெரியவா, சாயிபாபா போன்ற மகான் களும் இங்கே சந்நிதி கொண்டருள்கிறார்கள். எனவே இங்கு வந்து வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகள் யாவும் நிறைவேறுகின்றன என்கிறார்கள்.

இங்கு திருவோண பூஜை செய்வதால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நாக தெய்வங்களுக்கு மாதம்தோறும் ஆயில்ய நட்ச்சத்திர நாளில் நடைபெறும் நாக பூஜை விசேஷம். இதில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துகொண்டால், சர்ப்ப தோஷங்கள் தீர்வதோடு திருமணத் தடைகளும் நீங்கும்; நோய்கள் விலகும் என்கிறார்கள் பலன் கண்ட பக்தர்கள். மட்டுமன்றி குருவாயூர் போலவே சுற்று விளக்கு, துலாபாரம் ஆகிய வழிபாடு களையும் இந்த ஆலயத்தில் பக்தர்கள் செய்யலாம்.

வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை முத்தரசநல்லூர் சென்று குருவாயூரப்பனை வழிபட்டு வாருங்கள். குருவருளும் திருவருளும் நிச்சயம் கிடைக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *