ஒரு கட்டத்தில், நான் வெளிநாட்டிற்குச் சென்று திரைப்படத் தயாரிப்புப் படிப்பைப் படிக்க வேண்டும் என்று என் தந்தையிடம் கூறியபோது, அவர் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை.
அவர் சினிமா துறையிலேயே இருப்பதால், எனக்குச் சம்மதம் தெரிவித்தார். என் அம்மா மற்றும் சகோதரியை விடவும், இந்தப் படிப்பின் முக்கியத்துவத்தை அவர்தான் நன்றாகப் புரிந்துகொண்டார்.

மேலும், சினிமா மற்றும் திரைப்படத் தயாரிப்பு குறித்து இன்று பல நல்ல படிப்புகள் இருப்பதையும், பல்வேறு துறைகளையும் கலைகளையும் நாம் அதில் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் யோசித்தார்.
அவர் என்னிடம், ‘நீ முதலில் போய் அந்தப் படிப்பைப் படி. அப்போதுதான் உனக்கு எது பிடிக்கும், எது சரியாக வரும், அல்லது உண்மையில் இந்தத் துறை உனக்குச் செட் ஆகுமா என்பதைப் பற்றி உனக்கே ஒரு தெளிவு கிடைக்கும்’ என்று கூறினார். அந்த விஷயத்தில் அவர் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்” எனக் கூறியிருக்கிறார்.