திருச்செந்தூர்: கோயிலில் ரூபாய் நோட்டுகளைக் கிழித்தெறிந்த தாய், மகன்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன? | Mother and son cause a stir by tearing up currency notes within the Tiruchendur temple complex

Spread the love

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகிறார்கள்.

ஆதரவற்றவர்கள், வீட்டை விட்டு வந்தவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என, கோயில் வளாகத்தில் நிரந்தரமாகவே பலரும் தங்கி இருக்கிறார்கள். காலை முதல் இரவு வரை திருக்கோயிலில் தரப்படும் தொடர் அன்னதான உணவை உண்டு தங்கி வருகிறார்கள்.

ரூபாய் நோட்டுகளை கிழித்துப் போடும் தாய்,மகன்

ரூபாய் நோட்டுகளை கிழித்துப் போடும் தாய்,மகன்

இந்த நிலையில், திருக்கோயில் வளாகத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரும், அவரது 40 வயது மகனும் கடந்த சில மாதங்களாகவே தங்கி வருதுள்ளனர். இந்த நிலையில், கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் அமர்ந்து கொண்டு தங்கள் உடைமைகளை வைத்திருந்த பையில் இருந்து ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான ரூ.10, 20, 50, 100, 200 மற்றும் ரூ.500 வரையிலான ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்துள்ளனர். திடீரென இருவரும் மாறி மாறி ரூபாய் நோட்டுகளைக் கிழித்து வீசிக் கொண்டிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *