Special Shows: சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி! – சினிமாவுக்கு இது லாபமா?! cinema-industry-reaction-on-tamil-nadu-govt-6am-shows-and-ticket-price-hike

Spread the love

சிறப்புக்காட்சிகளுக்குத் தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து சிறப்புக்காட்சிகளுக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். மேலும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலை உயர்வு உள்ளிட்ட இன்னும் சில கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தது.

அதன் முதற்கட்டமாகத் தமிழக அரசு சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது. சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது, டிக்கெட் விலையை உயர்த்துவதற்கு வைக்கப்பட்ட கோரிக்கை உள்ளிட்டவை எப்படியான மாற்றங்களை உண்டாக்கும், அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்னென்ன என்பது குறித்துத் தமிழ் திரைத்துறை வட்டாரத்தினரிடம் பேசி தொகுத்திருக்கிறோம்.

தியேட்டர்

தியேட்டர்
For Representation Only

முதலில் பேசிய தயாரிப்பாளரும், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளருமான தனஞ்செயன், “முன்னதாக “வாரிசு’, ‘துணிவு’ திரைப்படங்களின்போது அதிகாலை 5 மணி காட்சிகளின் போது துரதிர்ஷ்டவசமாக ஒரு ரசிகர் உயிரிழந்தார்.

நள்ளிரவு 4 மணிக்கே ரசிகர்கள் கூடுவதாலும், கட்-அவுட்களில் ஏறுவதாலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டுதான் அரசு 9 மணி காட்சி என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது. ‘லியோ’ படத்தின் போது தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் சென்றபோதிலும், அரசின் முடிவைத்தான் நீதிமன்றமும் உறுதி செய்தது.

ஆனால், 9 மணி காட்சி என்பது திரையுலகிற்குச் சில நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் காலை 6 மணிக்கே காட்சிகள் தொடங்கப்பட்டுவிடும்.

தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குவதற்கு முன்பாகவே, அண்டை மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படத்தைப் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பதிவிட்டு, படத்தின் வெற்றியைப் பற்றி ஒரு நரேட்டிவ் உருவாக்கும் சூழல் ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *