திருச்செந்தூர் சூரசம்ஹாரம்! தமிழிசை சௌந்திரராஜன் தடுத்து நிறுத்தம்! போலீஸுடன் பாஜகவினர் வாக்குவாதம் | Tamilisai soundarajan was refused to enter at Tiruchendur soorasamharam venue

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார விழாவில் கலந்து கொள்ள சென்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனை போலீஸார் அனுமதிக்காததால் அவரது ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார விழா விமரிசையாக நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுமார் 5 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

tiruchendur tamilisai soundararajan

தொடர்ந்து தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சூரசம்ஹாரத்தை காண வந்திருந்தனர். இந்த நிலையில் சூரசம்ஹாரத்தை காண முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வந்திருந்தார்.

தொடர்ந்து அவர் சூரசம்காரம் நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி பேரிகாடுக்குள் அடைத்து வைத்திருந்தனர். இதனால் அங்கிருந்த தமிழிசை சௌந்தர்ராஜனின் ஆதரவாளருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

tiruchendur tamilisai soundararajan

இந்த நிலையில் இந்த விழா ஏற்பாடுகள் குறித்து தமிழிசை தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று (நேற்று) செந்தில் ஆண்டவனின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை தரிசிக்க வேண்டும் என்று திருச்செந்தூர் சென்றிருந்தேன்… சிறுவயதில் இருந்து நான் வணங்கி மகிழும் செந்தில் ஆண்டவன்… இன்று பொதுமக்களுக்கான ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகவே நான் அந்தக் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் சென்றேன் என்று சொல்லலாம்.

என்னோடு இருந்தவர்கள் கூட தொலைக்காட்சியிலேயே பார்க்கலாம் ஏன் நாம் சிரமப்பட வேண்டும் என்று கேட்டார்கள்.. பொதுமக்களுக்கு எந்த அளவிற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவாவது நாம் செல்லலாம் என்று சென்றேன்.

tiruchendur tamilisai soundararajan

உண்மையிலேயே லட்சக்கணக்கான மக்கள் கூடுகிற இடத்தில் இன்னும் சரியான ஏற்பாடுகளை செய்து இருக்கலாம். சென்ற ஆட்சியும் சரி இந்த ஆட்சியும் சரி பக்தர்கள் மீது அக்கறை இல்லாத ஆட்சியாகவே தான் இருக்கிறது என்பது வேதனை… இன்னும் சில சின்ன சின்ன கவனங்கள் செலுத்தி இருந்தால் கூட மக்கள் இன்னும் வசதியாக நிகழ்ச்சிக்கு வந்து சென்றிருக்கலாம்.

நான் வர வர பல பேர் என்னிடம் அதைப் பற்றி புகார் கூறினார்கள்.. ஆனாலும் மக்களோடு மக்களாக இறைவனை தரிசித்து திருப்தியோடு திரும்பினேன்.. என்னப்பன் செந்தில் ஆண்டவன் நம்முடனும் மக்களுடனும் எப்பொழுதும் துணை இருப்பான். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

tiruchendur tamilisai soundararajan

கடந்த ஆடி கிருத்திகை அன்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் கார் மலைக் கோவிலில் தடுத்து நிறுத்தப்பட்டது. தவெக ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடங்கி தற்போது திருச்செந்தூர் சூரசம்ஹாரம் வரை எந்த வித ஏற்பாடுகளும் சரியாக செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் சூரசம்ஹாரம் முடிந்து ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *