திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டிருப்பதாக முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
“தெருக்கூத்தாடிகளை எல்லாம் அழைத்து சென்று முதல்வருக்கு அரோகரா… அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்கிறார் ஒருவர். இன்னொருவர் சொல்கிறார் வேலை வாங்கி எப்படி முருகன் பாலகனாக இருந்து சூரனை வதம் செய்தாரோ, அது போல் வேல் பெற்று வதம் செய்த கடவுள் தமிழக முதல்வர் என்று வர்ணிக்கின்றார். அடுத்து துறையினுடைய அமைச்சர், வேலையும் சேவல் கொடியையும் இரண்டு கையிலே பிடித்துக் கொண்டிருக்கின்றார்.

வேலை வாங்குபவர் சட்டை இல்லாமல் வெறும் உடம்போடுதான் வேலையும் சேவல் கொடியையும் வாங்க வேண்டும். வேலை வாங்குகின்ற ஆகமம் எங்குமே இல்லை. அந்த வேலை பிடிப்பதும் வேலை கொண்டு சூரசம்ஹாரம் செய்வதும் அந்த திருக்கோவிலினுடைய அர்ச்சகர்கள், திருக்கோவிலுக்கு சொந்தமானவர்கள் தான், அந்த பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இவர் வேலை கையில் பிடித்துக்கொண்டு சேவல் கொடியை கையிலே பிடித்துக் கொண்டிருக்கின்றார்.