திருப்பதி கோயில்: `121 கிலோ தங்க ஆபரணங்கள்’ அர்ப்பணிப்பு; நன்கொடை கொடுத்தவர் யார்? | 121 kilograms of gold ornaments have been donated to the Tirupati Devasthanam.

Spread the love

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) ஒரே பக்தரிடமிருந்து சுமார் ரூ.206 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்படுகிறது.

சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு தனி நபரால் கோயிலுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய நன்கொடையாக இது கருதப்படுகிறது. இந்த அர்ப்பணிப்பு நிகழ்வில் ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு திருமலை கோயிலில் நேரில் கலந்து கொண்டு பார்வையிட உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்கம் நன்கொடை வழங்கும் விருப்பத்துடன், அடையாளம் தெரிவிக்க விரும்பாத பக்தர் ஒருவர் சுமார் 15 மாதங்களுக்கு முன்பு தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி சி.வெங்கையா சௌத்ரியை அணுகியுள்ளார்.

திருப்பதி

திருப்பதி

விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, சுவாமியின் அன்றாட வழிபாடு மற்றும் விசேஷ அலங்காரங்களுக்காக ஒன்பது செட்கள் மற்றும் 47 தனிப்பட்ட ஆபரணங்களைக் கொண்ட பிரமாண்ட நகைத் தொகுப்பை உருவாக்க அந்தப் பக்தர் ஏற்பாடு செய்தார்.

இந்த நகைத் தொகுப்பில் கிரீடம், ஒட்டியாணம், புஜகீர்த்திகள், சங்கு – சக்கரம், அபய ஹஸ்தங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆகம சாஸ்திர மரபுகள் மற்றும் தேவஸ்தான விதிமுறைகளுக்கு ஏற்ப, இந்த ஆபரணங்கள் 15 மாத காலத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *