திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், நேற்று அந்த மனு விசாரிக்கப்படாத நிலையில், இன்று தீபம் ஏற்றப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தை சுற்றிலும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் சுமார் 5000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163வின் கீழ், திருப்பரங்குன்றம் உள்பட, மதுரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடுவதற்கும், போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது அனுமதியின்றி யாரும் ஏறக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.