Tamilnadu
oi-Pavithra Mani
திருப்பரங்குன்றம்: திமுக ஆட்சியில் தொடங்கிய திருப்பரங்குன்றம் கோயில் மலை தீபம் விவகாரம், தவெக ஆட்சிக்கு வந்தும் ஓயவில்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக, தவெக அமல்படுத்தவில்லை என்பது விமர்சனமானது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை. இதனிடையே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது.
திருப்பரங்குன்றம் கோயில் மலையின் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒரு தரப்பும், தீபம் ஏற்ற கூடாது என்று மற்றொரு தரப்பும் கூறி வருகிறார்கள். இந்த விவகாரம் உச்ச நிதிமன்றம் சென்றது. கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றம் கோயில் மலையின் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தவெக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்தது. கார்த்திகை தீபத்தின்று, வழக்கமான தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் விவகாரம்
நீதிமன்றம் குறிப்பிட்ட தூணில் ஏற்றவில்லை. இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை அமல்படுத்தாதது வேதனையளிக்கிறது. இது அரசியலமைப்பு சீர்குலைக்கும். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மாட்டோம் என்று அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் நிர்வாக குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றனர். மேலும், திருப்பரங்குன்றம் மலையில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் ஏற்றும் தீபத்தின் மூலம், மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அறங்காவலர் குழுவை கலைத்தும், தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. பாதுகாப்புக்கு உட்பட்டு பக்தர்களை அனுமதிக்க வேண்டும். சிக்கந்தர் தர்காவில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்கு அப்பால் பக்தர்கள் விளக்கு ஏற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு தீபம்
இந்த உத்தரவைச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய, உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளனர். கோயில் மற்றும் தர்காவின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு சிஆர்பிஎப்க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து சிஆர்பிஎப் படை திருப்பரங்குன்றம் விரைந்துள்ளனர். பக்தர்கள் அதிகாலை முதலே திருப்பரங்குன்றத்தில் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.