இந்தியாவில் வெளியாகாத டாரண்டினோ – டேவிட் ஃபின்சர் படம்; நெட்பிளிக்ஸின் லாப கணக்கு! – பின்னணி என்ன? |the-further-mis-adventures-of-cliff-booth-not-released-in-india-netflix-strategy

Spread the love

இப்படம், திரைக்கதை வடிவத்தில் இருக்கும்போதே இயக்குநர் டாரண்டினோவிடம் பெரிய தொகையை அளித்து இப்படத்திற்கான உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது.

அப்படி நெட்ஃபிளிக்ஸின் ஒரிஜினல் திரைப்படமானது இந்த ‘The Further Mis-Adventures of Cliff Booth’. நெட்ஃபிளிக்ஸ் நீண்ட காலமாகவே வியாபார உத்தியாகச் சில விஷயங்களைப் பின்பற்றி வருகிறது.

Brad Pitt|Quentin Tarantino

Brad Pitt|Quentin Tarantino

நெட்ஃபிளிக்ஸ் தனது ஒரிஜினல் திரைப்படங்களை, தனது தளத்தில் பார்வையாளர்களைப் பார்க்க வைப்பதற்காகக் குறுகிய திரைகளில் மட்டுமே அப்படங்களை வெளியிடும்.

அதுவும் குறுகிய நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓட்டி, வெகு சீக்கிரமாகவே தன்னுடைய நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டுவிடும். இது தன்னுடைய ஒரிஜினல் படைப்பை, தனது தளத்திலேயே பார்வையாளர்களைப் பார்க்க வைப்பதற்கான உத்திதான். ஆனால், இதற்குப் பின்னால் ஆஸ்கர் கணக்கும் இருக்கிறது.

ஆஸ்கர் அகாடமியின் விதிமுறைகளின்படி, ஆஸ்கர் விருதுக்குத் தகுதி பெற அப்படங்கள் கட்டாயமாகச் சில நாட்களாவது திரையரங்குகளில் ஓடியிருக்க வேண்டும்.

ஆஸ்கர் விருதுகளுக்குத் தன்னுடைய படைப்புகளைத் தகுதி பெறச் செய்வதற்காகவே நெட்ஃபிளிக்ஸ் இப்படிச் சில நாட்கள் மட்டும் திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *