திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: CRPF வீரர்களை மலர் தூவி வரவேற்ற இந்து அமைப்பினர்!

Spread the love

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபமேற்ற வேண்டும், மலை முழுவதும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவே 131 சி.ஆர்.பி.எப் வீரர்கள் மதுரைக்கு வந்தடைந்தனர். இன்று காலையில் 20க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் மலையிலும் மீதமுள்ளவர்கள் மலையை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சி.ஆர்.பி.எப் வீரர்கள் மலைக்கு செல்வதற்காக வந்திருந்த போது அவர்களை இந்து அமைப்பினர் மலர் தூவி, மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர்.  கடந்த முறை மலைக்கு செல்லும் வழியிலேயே தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என யாருமே மலையேற அனுமதிக்கப்படவில்லை. தற்போது தர்காவிலிருந்து 50 மீட்டர் தொலைவில் யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால் காலையிலிருந்தே பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

மறுபுறம் சிக்கந்தர் தர்காவில் தொழுகை செய்வதற்காக இஸ்லாமியர்களும் மலைக்கு சென்று திரும்பியிருக்கின்றனர். மலைக்கு செல்லும் நபர்களின் ஆதார் கார்டு விவரங்களைக் கொடுத்து சரிபார்த்து அவர்களை சோதனை செய்த பிறகே மலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

தீபமேற்றும் பணிகளை ஒருங்கிணைத்து தீபம் ஏற்றுவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் வைத்தியநாதன் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

நீதிபதிகள் கொண்ட குழுவினர் இன்று காலையில் மதுரைக்கு வந்து தனியார் தங்கும் விடுதியில் கல்தூணில் தீபமேற்றும் நேரம் குறித்து திருப்பரங்குன்ற ஸ்தானிகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கல்தூணிலும் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *