’10 வருஷமா உங்க மனைவிக்கு கிடைக்காத சீட், உங்களுக்கு எப்படி.?’- சுந்தர் சியை சாடிய பிரகாஷ் ராஜ்| Prakash Raj slams Sundar C

Spread the love

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.

அந்தப் பரப்புரையில் சுந்தர் சி குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், “வேட்பாளராக ஆக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை சினிமா சூட்டிங்கில் இருந்தீர்கள்.

எந்த அரசியல் பிரச்னைகளுக்கோ அல்லது மதுரை மக்களுக்காகவோ குரல் கொடுக்காமல், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென வந்துவிட்டால் மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?

சுந்தர் சி

சுந்தர் சி

புதிய நீதிக்கட்சியில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதன் கொள்கை என்ன?. சினிமாவில் இயக்குநர் ஆவதற்கு எத்தனை விஷயங்களை கஷ்டப்பட்டு கற்றிருப்பீர்கள்.

ஆனால், எம்.எல்.ஏவாக மட்டும் உடனே ஆகிவிடுவீர்களா?. உங்கள் மனைவி 10 வருடங்களாக அரசியல் செய்து கேள்விகளை கேட்கிறார். அவருக்கு கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது என யோசிக்க மாட்டீர்களா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *